தேசிய ஆசிரியர் சபையை நிறுவுவதற்கான சட்டமூலம் விரைவில்

தேசிய ஆசிரியர் சபையை நிறுவுவதற்கான சட்டமூலம் விரைவில்

ஆசிரியர் சேவை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள, தேசிய ஆசிரியர் சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்றைய பொருளாதார மாற்றத்திற்கு கல்வி இன்றியமையாத அங்கமாகும் என்பதை அறிந்து, கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு நேற்று முன்தினம் (11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்தக் குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட 08 அமைச்சர்கள் உள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கைக் கட்டமைப்பில் குறுகிய கால மற்றும் இடைக்கால கல்வி மாற்றத்துக்கான செயல்முறைகளைக் கொண்டுள்ளது. மேலும், கல்வித் துறையில் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமானதும்,விரைவானதுமான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

ஆசிரியர் சான்றளிப்பு முறையை நிறுவுதல், உட்பட ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்முறைகள் மற்றும் ஆசிரியர் சேவை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளுதல், தொழில்முறைச் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களின் தொடர்ச்சியான பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய ஆசிரியர் சபையினை (National Council for Teachers) நிறுவுவதற்கான சட்டமூலம் ஒரு மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆசிரியர் தொழிலை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாற்றுதல், ஆசிரியர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கான ஒரு சரியான தொழில்முறை பாதையை வடிவமைத்தல் (professional pathway) உள்ளிட்ட சிறந்த முறையிலான தொழில்முறைக் கட்டமைப்பை உருவாக்குதல், வளர்ந்து வரும் தொழில் தரநிலைகளுக்கு ஏற்ப ஆசிரியர் சம்பளக் கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் சிறந்த முறையில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைத் தெரிவு செய்து விருதுகளை வழங்கும் செயற்பாடுகளை மேற்படி சபை முன்னெடுக்கும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image