இன்று(23) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இனறு அலுவலக சேவை, நுகர்வோர் சேவை உள்ளிட்ட எந்தவொரு சேவையும் முன்னெடுக்கப்படாதென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்க இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காசாளர் பிரிவு மூடப்படும் அதேநேரம் கட்டணப் பட்டியல் விநியோகமும் முன்னெடுக்கப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படாமையினால் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படலாமென அவர் கூறியுள்ளார்.