ஆசிரியர்களின் இடமாற்றம்: கல்வி அமைச்சர் பாராளுமன்றில் வெளியிட்ட அறிவித்தல்

ஆசிரியர்களின் இடமாற்றம்: கல்வி அமைச்சர் பாராளுமன்றில் வெளியிட்ட அறிவித்தல்

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வழங்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அஞ்சலிடப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்களும் சில மாதங்களில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கல்வியமைச்சர் நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களிலும் நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை.

 

அதனால் கடந்த வருடம் 14, 500 விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன.

 

அதற்கான இடமாற்ற சபையொன்று நடைமுறையில் உள்ளது.

 

அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரும் அந்த சபையில் உள்ளடங்குகின்றனர்.

 

அந்த வகையில் இரண்டு விதமாக ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதில், சாதாரணமாக கோரப்படும் இடமாற்ற முறைமையில், நீண்ட காலமாக கஷ்டப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுபவர்களும் உள்ளடங்குவர்.

 

 

 

 

03 – 02

 

மற்றையது 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டது.

 

அந்த வகையில் 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை அடிப்படையாக வைத்தே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

இது தொடர்பான விடயம் ஆலோசனை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இடமாற்றம் வழங்கவும், ஏனைய ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கிணங்க பாடசாலை விடுமுறை முடிவடைந்ததும் ஏப்ரல் மாதத்தில் இணைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

 

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image