ஒவ்வொரு வருடமும் தொழிற்சங்கங்களோடு அநாவசிய பிரச்சினை - ரொசான் ராஜதுரை
கூட்டு ஒப்பந்தம் என்பது 23 பெருந்தோட்ட நிறுவனங் ஒன்றாக செயல்பட வேண்டிய ஒன்று தனிதனியாக செயற்பட முடியாது என்று களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.
பொது நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட போது ஊடகவியலாளர்களால் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக கேட்கப்பட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
நாம் இப்போது சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளதால் இதன் பிறகு கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்லவேண்டி ஏற்படும் என்ற நான் நினைக்கவில்லை, தொழிற்சங்கங்களே தெரிவித்தன கூட்டு ஒப்பந்தம் தேவையில்லை சம்பள நிர்ணய சபைக்கு போவோம் என்று. எங்களுக்கும் விருப்பம் சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு கட்டுப்பட்டு கடமையாற்றுவதற்கு இந்த சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தில் பெருந்தோட்டத்தில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் தொழிலாளர்களும் சிறு தோட்ட பகுதியில் ஐந்து லட்சம் பேரும் உள்ளடக்கப்படுகின்றனர்.
இது எங்களுக்கு நல்லது இல்லாவிட்டால் ஒவ்வொரு வருடமும் தொழிற்சங்கங்களோடு அநாவசிய பிரச்சினையை ஏற்படுகின்றது. நாம் தொடர்ந்தும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு உடன்பட்டு அதன்படி செயற்படுவோம், என்றும் அவர் தெரிவித்தார்.