பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தினை அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசினை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தொழிலாளர் பறிக்கும் பச்சை தேயிலைக் கொழுந்து அளவீடு செய்வதில் முறைக்கேடு இடம்பெறுவதாக பெறப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தேயிலை அளவீடு செய்துக்கொண்டிருக்கும்போது சுற்றிவளைப்பு மேற்கொண்டு டிஜிட்டல் தராசு பறிமுதல் செய்யப்பட்டதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி ஆரியபால தெரிவித்தார்.
பச்சை தேயிலை கொழுந்து அளவீடு செய்யப்படும் டிஜிட்டல் தாராசு மூன்று வருடகாலமாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டதோடு இறுதியாக 2020ம் ஆண்டு 12ம் மாதம் முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு தொழிலாளி பறிக்கும் 15 கிலோகிராம் பச்சை தேயிலை கொழுந்தினை அளவீடும் செய்யும் போது தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 03 கிலோகிராமும் 10 கிலோகிரம் பச்சை தேயிலையாக இருந்தால் 02 கிலோகிராமும் 05 கிலோகிராம் பச்சை தேயிலையாக இருந்தால் 01 கிலோகிராம் தேயிலையையும் தோட்ட நிர்வாகம் பிடித்துக் கொள்வதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த தாராசினை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டு குறித்த பொகவந்தலாவ தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக வழங்கு தொடர உள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்