ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அரச நிறுவனங்களில் VRS

ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அரச நிறுவனங்களில் VRS

சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுயவிருப்ப ஓய்வு திட்டம் (VRS) அறிமுகப்படுத்தப்படுமெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சுய ஓய்வு பொறிமுறையின் மூலம் அரச ஊழியர்கள் தன்னார்வமாக நீக்கப்படுவரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து திணைக்களங்களிலும் தமது செலவினங்களைக் குறைக்குமாறு அமைச்சுக்களுக்கு திறைசேரி அறிவுறுத்தியுள்ளது.

இதன் பிரகாரமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இதுபற்றித் தெரிவித்த அவர், திறைசேரியின்  சுற்றறிக்கைகளுக்கு அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளனர்.

அரச சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது.அரச துறையில் நிலவும் வெற்றிடங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரிவோர்களால் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“உதாரணமாக, புதிதாக 29,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பரீட்சை மூலம் அரசாங்கத் துறையின் உற்சாகமான பணியாளர்களிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image