ஆரஞ்சு வண்ண ஆடையில் பாராளுமன்றம் வந்த பெண் எம்பிக்கள்

ஆரஞ்சு வண்ண ஆடையில் பாராளுமன்றம் வந்த பெண் எம்பிக்கள்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 16 நாள் செயல்முனைவை முன்னிட்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (01 பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து பிரசன்னமாகியுள்ளனர்.

2022 பிரசாரத்தின் உலகளாவிய தொனிப்பொருள், 'ஒன்றிணையுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முனைவு' என்பதாகும்.

நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை இந்த 16 நாள் செயல்முனைவு உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது.

இதனை முன்னிட்டு, இன்றைய தினம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து பிரசன்னமாகியுள்ளனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷின் பெர்னாண்டோபுள்ளே மற்றும் உப இணைத் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹனி குமாரி விஜேரத்ன ஆகியோர் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்துக்கு பிரசன்னமாகியுள்ளனர்.

MP orange

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image