சகல அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படமாற்றார்கள்

சகல அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படமாற்றார்கள்

பொதுவாக அரச உத்தியோகத்தர்களின் இடமாற்ற முறைக்கு அமைவாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் பாடத்திட்டத்தை பூரணப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும்.

இதனால் மாணவர்களின் கற்கை நெறி தேவைகளில் கவனம் செலுத்தி ஆசிரியர்கள் உரிய முறையில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

டிஜிட்டல் கல்வி அபிவிருத்திக்கான கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கல்வியின் பிரதான திட்ட வரைவை ,கல்வி அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும் செய்தி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் - CTSU

தொழில்நுட்பத்தை நிர்வாகத்திற்கு உரிய முறையில் பயன்படுத்தாமையால் ,தொழில் வாய்ப்பு மற்றும் ஆசிரியர் சங்கங்கள், இடமாற்ற சபை முரண்பாடுகள் போன்ற பல நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு நீண்டகாலம். அது முறையாகப் பயன்படுத்தப்படாததால், நான்காவது தொழில் புரட்சியின் போது நாம் தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியிருந்தோம். எதிர்காலத்தில் சீர்திருத்தங்களுக்கு அப்பால் மாற்றத்தை இலக்காகக் கொண்டு கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மூலம் - நியூஸ்.எல்கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image