வருமான வரி விபரம் சமர்ப்பிப்பதற்கான காலம் ஒரு வாரத்துக்கு நீடிப்பு

வருமான வரி விபரம் சமர்ப்பிப்பதற்கான காலம் ஒரு வாரத்துக்கு நீடிப்பு

வருமான வரி கணக்கு விபரங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டு, அதற்கிணங்க இன்னும் ஒருவார காலத்திற்கு அதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வருமான வரி கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படுவது தொடர்பிலான தாமதத்திற்கு எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் நபர் வருமானம்,நிறுவன வருமானம்,மற்றும் பங்குடமை தொடர்பான வருமானம் உள்ளிட்ட வருமானங்களின் வரி விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்னும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கையை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு குறித்த தரப்பினருக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பல்வேறு காரணங்களைக் கருத்திற்கொண்டு அதற்கான ஆவணங்கள் முழுமைப்படுத்தப்படாத நிலையில்,வருமான வரி கணக்கு தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பதற்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன், விபரங்கள் 2022.11.30 ஆம் திகதியன்று சமர்ப்பித்ததாக கருதப்பட்டு பதிவு செய்வதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image