பெற்றோல் விலை குறைக்கப்பட்டபோதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைப்பது சாத்தியமில்லை என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெற்றோல் விலை குறைக்கப்பட்டபோதிலும் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட பெற்றோல் அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இன்னமும் எமக்கு 5 லீற்றர் பெற்றோல் மாத்திரமே வழங்கப்படுகிறது. 5 லீற்றர் பெற்றோலை பெற்று ஓடுவதனூடாக எமது வாழ்க்கைச் செலவை சம்பாதித்துக்கொள்வது சாத்தியமில்லை என்றும் அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேக்கர தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு இது கருத்து தெரிவித்த லலில் தர்மசேக்கர, பெரும்பாலான முச்சக்கரவண்டி சாரதிகள் சட்டவிரோதமான முறையில் மேலதிக பெற்றோலை பெற்றுக்கொள்கிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டு துறைசார் அமைச்சர் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வழங்கும் பெற்றோலின் அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின், நாளொன்றுக்கு ஐந்து லீற்றர் பெற்றோலை தமது சேவையில் தொடர அனுமதிக்குமாறும் தொழிற்சங்கம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மீட்டர் மற்றும் மீட்டர் இல்லாத முச்சக்கரவண்டிகளுக்கு கட்டணத்தை அறிவிக்கும் அதே வேளையில் முச்சக்கர வண்டி சேவையை ஒழுங்குபடுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.