பெற்றோல் விலை குறைப்பால் பாடசாலை போக்குவரத்து வாகனங்களுக்கு பயனுண்டா?
டீசல் விலையை குறைப்பதன் மூலம் மக்கள் பயனடைவார்கள், பெற்றோல் விலை குறைப்பினால் அல்ல என அகில இலங்கை மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை வேன் போக்குவரத்து சங்கம் உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் அதேவளை, அதன் பயனை பெற்றோர் அனுபவிக் கமுடியும். போது, அந்த சலுகை பெற்றோருக்கு வழங்கப்படலாம்.
"இப்போது நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். டீசல் விலையை குறைத்தால் எங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அது நடக்கவில்லை," என்று பிரசாத் கவலை வௌியிட்டார்.