பட்டினியில் வாடும் நாடுகள் பட்டியலில் இலங்கை

பட்டினியில் வாடும் நாடுகள் பட்டியலில் இலங்கை

உலகில் பட்டியில் வாடும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி உள்ளதாக நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக உணவுத் திட்டம் கடந்த ஜூன் மாதம் உலகில் பட்டினியால் வாடும் நாடுகள் பட்டியலில் முதற்தடவையாக இலங்கை உள்ளடக்கியது. அதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் வௌியிட்டுள்ள அறிக்கையிலும் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம், இவ்வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் இலங்கை உட்பட 19 நாடுகளில் உணவு நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

பாரிய உணவு நெருக்கடியுள்ள நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரேன் மோதல், காலநிலை, நாடுகளுக்கிடையலான மோதல் மற்றும் தொற்று நோய் பரவல் ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு உணவு ரெுக்கடி தோன்றியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image