சம்பள அதிகரிப்பு கோரி தோட்ட சேவையாளர் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட சேவையாளர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நேற்று (01) தலைவாக்கலை நகரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான தோட்ட சேவையாளர்கள் ஆக்ரோசத்துடன் கலந்து கொண்டனர்.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை முதலாளிமார் சமையல் எண்ணத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பெருந்தோட்ட கம்பெனிகள் தமக்குரிய சம்பளம் அதிகரிப்பை வழங்கி வருகின்ற போதிலும் ஒரு கம்பெனி மாத்திரம் கடந்த முறை முன்முடியப்பட்ட சம்பள அதிகரிப்பை இதுவரை வழங்கவில்லை என்றும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தாம் தொடர்ந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சேவையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இம்முறை கைச்சாத்திடப்படவிருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் முதலாளிமார் சமையலனும் தமக்கு 25 சதவீத சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ள போதிலும் தற்போதைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் நிமிர்த்தம் தமக்கு 75% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அதனை வலியுறுத்தும் வகையிலேயே இன்றைய தினம் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை 11 மணியளவில் தளவாக்கலை மல்லியப்பூ கதிரேசன் கோவில் அருகில் ஆரம்பித்து பேரணியாக நகரின் சுற்றுவட்ட பாதை வரை நகர்ந்தது. தமக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதிலும் உள்ள சுமார் 490 பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்ட சேவையாளர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். தமது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணி பகிஸ்கரிப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற எச்சரிக்கை இணையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பகிரங்கமாக விடுத்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது தலவாக்கலை நகரின் ஊடாக பொது போக்குவரத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட்டது.