அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தீர்மானமொன்றை அரசாங்கம் எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களை குழப்பும் வகையில் சிலர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் என்றும் அவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.