அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களுக்கு விசேட கலந்துரையாடலுக்கு அரசாங்கம் அழைப்பு
கிராம சேவகர் பிரிவுகளை கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையமாக பலப்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடலுக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கலந்துரையாடல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நாளை 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அமைச்சின் கட்டிட தொகுதியில் 19வது மாடியில் இடம்பெறவுள்ளது.
மேலும் செய்திகள் 2023 ஜனவரியில் ஓய்வுபெறவுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை வௌியானது
ஐந்து வருட சம்பளமில்லா விடுமுறை அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொருந்துமா?
அரச வெற்றிட ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய குழு
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக குறைத்து சுற்றுநிருபம் வெளியீடு
இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு,
முற்போக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம்
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
அகில இலங்கை அபிவிருத்தி சங்கம்
ஆகியவற்றுக்கு பொது நிர்வாக அமைச்சினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.