ஐந்து வருட சம்பளமில்லா விடுமுறை அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொருந்துமா?

ஐந்து வருட சம்பளமில்லா விடுமுறை அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொருந்துமா?

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 5 வருட சம்பளம் இல்லாத விடுமுறையானது ஆசிரியர், சுகாதார மற்றும் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கானது அல்ல என்று பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிருவாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்ன டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து வௌியிடும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நீண்ட கால விடுப்புக்கான இந்த சுற்றறிக்கை, பல்வேறு நிறுவனங்களின் அதிகப்படியான ஊழியர்களை அரசாங்கம் நீக்குவதற்காகவே அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்றார்.

"நாங்கள் இப்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image