ஆசிரியர் சேவை சுற்றறிக்கையில் உள்ளீர்க்கப்படாத விடயம் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

ஆசிரியர் சேவை சுற்றறிக்கையில் உள்ளீர்க்கப்படாத விடயம் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் சேவை தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடு தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று (24)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வௌியிடுகையில்,

இந்த தீர்மானத்துடன் பார்க்கும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் தூர பிரதேசங்களில் இருந்து தங்குமிடங்களை எடுத்து தங்கியிருந்து பாடசாலைகளுக்கு கற்பித்தல் பணிக்காக செல்கின்றனர். இவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

குறிப்பாக நாங்கள் கல்வி நடத்திய  பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் சார்பில் அவதானம் செலுத்தப்பட்ட விடயமானது, எஞ்சிய நாட்களில் கற்றல செயற்பாடுகளை வழங்கி அந்த நாட்களில் கற்றல் பணிகளை முழுமைப்படுத்துவது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தூரப்பிரதேசங்களில் இருந்து கற்பித்தலுக்காக செல்லும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் சுட்டிக்காட்டினோம். இதன்போது கல்வியமைச்சின் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட விடயமானது, நேர அட்டவணையைத் தயாரிக்கும்போது தூரப்பிரதேச ஆசிரியர்களுக்கு இலகுவான ஒரு நேர அட்டவணையைத் தயாரிப்பதற்கான  நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்குவதாகக் கூறப்பட்டு இருந்தது. ஆனால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அவ்வாறானதொரு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கவில்லை.

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் முதலான நாட்களில் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற விடயமே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக தூரப்பிரதேசங்களில் இருந்து கடமைக்கு சமூகமளிகக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு இலகுவான நேர அட்டவணையை தயாரித்துக் கொள்வது தொடர்பான அறிவித்தல் இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது பாடசாலை ஆரம்பிக்கும் போது ஏற்பட்டுள்ள ஒரு குறைபாடாக இருக்கின்றது - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image