டிக்கட் வழங்கும் சேவையிலிருந்து விலகிய ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

டிக்கட் வழங்கும் சேவையிலிருந்து விலகிய ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

இன்று (23) காலை 6.00 மணி தொடக்கம் ரயில் டிக்கட்டுக்கள் வழங்கும் சேவையில் இருந்து விலகிக்கொள்வதாக ரயில் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியான நிலையில் மக்கள் வாழ்வதைக் கருத்திற்கொள்ளாமல், நியாயமற்ற முறையில் ரயில் டிக்கட் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் பயணிகளால் ரயில்வே திணைக்களத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எனினும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பயணச்சீட்டு கட்டணத்தை ஓரளவிற்கு அதிகரிப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் திணைக்கள தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்

ரயில் சேவைகள் இன்று வழமைப்போல்...

குறிப்பிட்ட நிலையங்களுக்கு இடையில் முன்பதிவு செய்யக்கூடிய மூன்றாம் வகுப்பு இருக்கை டிக்கெட்டுகளின் விலையை விட சாதாரண மூன்றாம் வகுப்பில் (3) டிக்கெட் கட்டணங்கள் அதிகரிப்பதால் சிக்கல்கள் ஏற்படும் என்று நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

மேலும், வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட பருவகால டிக்கெட் கட்டணமும் கணிசமாக அதிகரிக்கும்.

 ரயில் கட்டண திருத்தம் குறித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பயணிகளுக்கு தெரிவிக்காவிட்டால், , பயணிகளுக்கும் ரயில்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், பல ரயில் நிலையங்களில் வழக்கமான அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளின் இருப்பு விரைவாக தீர்ந்து வருவதால், நிர்வாகத்தால் மாற்று தீர்வுகளை வழங்க முடியவில்லை.

நியாயமான முறையில் 60% கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இது தவறானது எனவும், இது பயணிகளை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய திருத்தத்தின்படி, முந்தைய கட்டணமான 15 ரூபா 125 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய கட்டணம் 40 ரூபாவாகும்.

சில ரயில் நிலையங்களுக்கு இடையிலான டிக்கெட் கட்டணத்தை நிர்வாகம் 350% உயர்த்தியுள்ளது என்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image