இராணுவ நடவடிக்கையின் விபரீதம் குறித்து ரவி குமுதேஷ் சபாநாயகரிடம் தெரிவிப்பு

இராணுவ நடவடிக்கையின் விபரீதம் குறித்து ரவி குமுதேஷ் சபாநாயகரிடம் தெரிவிப்பு

போராட்டக் களம் மற்றும் அது தொடர்பான இடங்களிலிருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இராணுவ நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுகாதார தொழில் வல்லுநர் அறிஞர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் மூலம் இத்தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளது என்றும் அப்படியானால் அது இலங்கையில் நடக்கக்கூடிய மிக மோசமான அவலத்தின் ஆரம்பமாக அமையும் என்றும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போராட்டத்தை அடக்குவதற்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் அரசியல் சாசன தீர்வுகளையும் தாமதப்படுத்துதல் ஊடாக, போராட்டக் களம் மற்றும் அது தொடர்பான இடங்களிலிருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு இராணுவ நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் மூலம் எமக்குத் தெரிவிக்கப்படுகிறது. அப்படி நடந்தால், இலங்கையில் நடக்கப்போகும் மிக மோசமான சோகத்தின் தொடக்கமாக இது அமையலாம்.

இவ்வாறானதொரு நிலையைத் தவிர்த்துவிட்டு, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து தீர்க்க உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தலைமைத்துத்தை பெற்றுத் தருவதாக தெரியவில்லை.

எனவே, நாடு ஒரு பயங்கரமான சோகத்தில் தள்ளப்படாமல், பின்வரும் விடயங்களை நிறைவேற்றுவதற்கு உங்கள் உடனடித் தலையீட்டை வழங்குமாறு அன்புடன் ​கேட்டுக்கொள்கின்றோம்.

1. பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

2. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் பிரதமரைக் கொண்ட இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்கான அனைத்து
அரசியலமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

3. ஒரு இடைக்கால ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கூடிய விரைவில், குறுகிய காலத்திற்கு ஜனாதிபதியின் பதவியை ஏற்றுக்கொள்ளல்.

4. முக்கியமான பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பொதுத் தேர்தல்கள் வரை இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் இடைக்கால அரசாங்கத்திற்கு ஒரு
காலக்கெடுவுக்கான திட்டப்படம் ஒன்றை உருவாக்குதல்.

மேற்கூறிய விடயங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்றும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் தாமதம் அல்லது பலவீனமான தலைமைத்துவத்தை வழங்குவதன் சாத்தியமான ஆபத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் நகல் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image