அடுத்த வாரம் பாடசாலைகளை முன்னெடுப்பது பற்றிய கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அடுத்த வாரம் பாடசாலைகளை முன்னெடுப்பது பற்றிய கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அடுத்த வாரம் பாடசாலைகளின் கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான புதிய அறிவிப்பை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலையின் அதிபர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து ஜூன் 27 முதல் ஜூலை முதலாம் திகதி வரையான வாரத்தில் பாடசாலைகளின் இயக்கம் தொடர்பாக  கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூன் 27ஆம் திகதிடன் ஆரம்பமாகும் வாரத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலத்தில் பாடசாலைகளை நடத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படும்.

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை

மின்தடை அமுலாகும் காலம் அதிகரிப்பு

டோக்கன் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

எனவே கடந்த வாரம் போன்று நாளை 27 முதல் ஜூலை முதலாம் திகதி வரையான வாரத்தில் மேல் மாகாணத்தில் கொழும்பு பிராந்தியத்திலும் அதனை அண்மித்த நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளை கடந்த வாரத்தைப்போன்று நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 2 முதல் ஜூலை 1 வரையிலான வாரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கிராமப்புற பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிக்கல் இருப்பின் செவ்வாய் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலைகள முன்னெடுக்குமாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நாட்களில் பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை தினமாக பதிவு செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள​ைமாகாண ஆளுநருக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளத.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தவணைப் பரீட்சைகள் 2022ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் நடத்த தயார்ப்படுத்தப்படுமாயின் இரண்டு வாரங்களின் பின்னர் அந்த தவணைப் பரீட்சைகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் சிங்கள மொழியிலான அறிவித்தல்

IMG-20220626-WA0021.jpg

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image