நிலமற்றோருக்கு நிலவுரிமையை உறுதிப்படுத்துவதற்கான தேசியத் தினம்

நிலமற்றோருக்கு நிலவுரிமையை உறுதிப்படுத்துவதற்கான தேசியத் தினம்

நிலமற்றோருக்கு நிலவுரிமையை உறுதிப்படுத்துவதற்கான தேசியத் தினமாக ஜூன் மாதம் 21ம் திகதி பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் அறிவித்துள்ளது.

உருளவள்ளி தோட்ட போராட்டம் தொடங்கப்பட்ட ஜுன் 21ம் திகதியை 'காணி தினமாக' இவ்வியக்கம் முன்மொழிந்து எதிர்வரும் 21ம் திகதி அட்டன் மாநகரில் அங்குராப்பணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான ஏற்;பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் மேலும் தெரிவித்தார்.

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலவுரிமையற்றோர் தொகை கணிசமாக காணப்படுவதுடன்; இருபது தசாப்தங்களுக்கு மேலாக மலையகத் தமிழர்கள் நிலவுரிமையற்ற சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். வாழ்வதற்கும், வாழ்வாதரத்திற்குமான காணியுரிமைக்காக குரல் கொடுத்து வந்த போதிலும் தேசிய அரசியல் நீரோட்டத்தின் பிரதான கருப்பொருளாக பிரகடனப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இந்நாட்டில் காலத்திற்கு காலம் அரசியல் ரீதியாக சமத்துவமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை தீர்மானங்களினால் குடியுரிமை, வாக்குரிமை, காணி, கல்வி, மொழி, அரச தொழில் வாய்ப்பு மற்றும் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற உரிமைகளை அனுபவிப்பதில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டதோடு இம்மக்களின்; வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் காணியுரிமை மறுக்கப்படுகின்றமையே பிரதான தடையாக காணப்படுகின்றது எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

பயிரிடப்படாத பெருந்தோட்டக் காணி பயன்பாடு தொடர்பில் நிலையான கொள்கை அவசியம்!

தோட்டங்களில் பட்டினி சாவைத் தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து வழங்குக - பிரதமரிடம் மனோ கோரிக்கை

​மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பாதிப்பு

சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்களால் மலையக மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்களும், ஒப்பந்தங்களும் இம்மக்களின் குடியுரிமை, வாக்குரிமை மற்றும் சனத்தொகை குறைப்பு போன்ற விடயங்களினால்;; இவர்கள் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்றுவரை நில உரிமையற்ற சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களினால் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டு அதே நிலையில் வேறு தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே 1946ம் ஆண்டு ஜுன் மாதம் 21ம் திகதியிலிருந்து ஜுலை 9ம் திகதி வரை நடந்த கேகாலை பகுதியிலுள்ள உருளவள்ளிப் போராட்டமே மலையக மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய முதல் காணி உரிமை போராட்டமாக வரலாற்றில் பதியப்படுகின்றது. இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருந்த 400 ஏக்கர் காணி பறிக்கப்பட்டு வெளியார் குடியேற்றத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட போது இலங்கை வாழ் இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென்று இலங்கை இந்திய காங்கிரஸ் தலைமையில் கேகாலை, களனிவெளி, ஹட்டன் போன்ற பகுதிகளில் 125000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து போராடியிருந்தமை தற்போதய காணி உரிமை போராட்டங்களுக்கு மிகவும் முன்னுதாரனமாகும்.

காலத்திற்கு காலம் இம்மக்களுக்கு காணியுரிமை உற்பட ஏனைய உரிமைகளுக்காக குரலெழுப்பிய மலையக தியாகிகளின் செயற்பாடுகள் இம்மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு முன்னுதாரனமாகும். மலையக மக்களுக்கான காணி உரிமைக்கான போராட்டங்களும், அழுத்தங்களும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட்டாலும் இதுவரை இவ்விடயம் சாதகமற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. எனவே தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் இவ்விடயம் பேசு பொருளாக உருவாக வேண்டிய தேவை தற்போது காணப்படுவதுடன், தொடர்ந்து மலையக மக்களின் காணி உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நேச சக்திகளும் ஒன்றிணைத்து குரல் கொடுப்பதற்காக இந்நாட்டில் 'நிலமற்றோருக்கான நிலம்' தொடர்பாக ஒரு தேசிய தினத்தினைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதற்காக கடந்த 18 வருடங்களாக இவ்வியக்கம் தனது செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறது என்றும் எஸ்.டி. கணேசலிங்கம் சுட்டிக்காட்டினார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image