இலங்கைக்கு வருகைத்தர எதிர்பார்த்திருந்த சுமார் 40 வீதமான சுற்றுலாப்பயணிகள் தமது பயணத்தை ரத்து செய்துள்ளனர் என்று செய்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வருகைத் தர முன்கூட்டியே பதிவு செய்துகொண்ட சுற்றுலாப்பயணிகளே பதிவை ரத்து செய்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 35 முதல் 40 சதவீத வெளிநாட்டினர் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். பொதுவாக ஓகஸ்ட் மாதத்தி சராசரி நாளொன்று 6000 சுற்றுலாப்பயணிகள் வரை வருகைத் தருவார்கள். எனினும் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இம்முறை சுற்றுலாப்பயணிகளின் வருகை இன்னும் குறையலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.