நாடு மூடப்படும் அபாயம்! ஆனந்த பாலித வெளியிட்ட தகவல்!

நாடு மூடப்படும் அபாயம்! ஆனந்த பாலித வெளியிட்ட தகவல்!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது. ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை சென்றடைய குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயத்தினைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கோரியுள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் வரிசைகளில் காத்திருப்பதுடன் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image