மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்தும் தீர்மானத்திற்கு தாதியர் சங்கம் கண்டனம்!

மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்தும் தீர்மானத்திற்கு தாதியர் சங்கம் கண்டனம்!

கடந்த இரு மாதங்களாக மேற்கொண்ட மேலதிக நேர பணிக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க எடுக்கப்பட்ட தீர்மானம் கண்டனத்துக்குரியது என்று அரச தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பேராதனை  மற்றும் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை கிளைகள் அம்மருத்துவமனை பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் இவ்விடயம் சுட்டிக்காட்டியுள்ளன.

ஏற்கனவே செய்து முடித்த பணிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையானது அநீதியான செயற்பாடு என்றும் அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து

மேலும், வார ஓய்வு நாட்கள், அரச பொது விடுமுறை நாட்கள் கொடுப்பனவுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், தாம் செய்த சேவைகளுக்கான கொடுப்பனவை இடைநிறுத்த மேற்கொண்டுள்ள தீர்மானம் அநீதியானது. நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அத்தீர்மானத்தை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதஙிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்தை ரத்து செய்யாதபட்சத்தில் தாய்சங்கத்தின் தீர்மானத்திற்கமைய கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image