இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அடையாள வேலை நிறுத்தத்தை நாளை (28) நள்ளிரவு வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர் யூனியன், ரயில்வே ஊழியர் சங்கம், ரயில் தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.