போராட்டம் தொடர்பில் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்
நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஆட்சியை கட்டியெழுப்புவதற்காக, தோல்வி அடைந்துள்ள அரசாங்கத்தை நீக்க வேண்டும் என்பதை முழு நாடும் ஏற்றுக்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரச மற்றும் மாகாண அரச சேவை சேவையில் MN-4 சம்பள தரத்திற்கு உட்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளும் இணைந்து கொள்வார்கள் என அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராச்சி அறிவித்துள்ளார்.
இது குறித்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் என்ற அடிப்படையிலும், நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் என்ற அடிப்படையிலும் கடந்த 25ஆம் திகதி அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கும், அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், இராஜங்க அமைச்சின் செயலாளர்களுக்கும, மாகாண ஆளுநரின் செயலாளர்களுக்கும் மாகாண ஆளுநரின் செயலாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றிணைந்து சேவை பணிப்பாளர் நாயகத்திற்கும், திணைக்கள பிரதானிகளுக்கும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏப்ரல் 28ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தம் தொடர்பில் கடந்த 25ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் நாளைய விடுமுறை அறிவித்தல் தொடர்பாக
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? நிதி அமைச்சின் அறிவித்தல் இதோ...
நாடுதழுவிய போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோத்தர்கள் சங்கம் ஆதரவு