அநீதிக்கு எதிராய் டின்சின் தோட்டத் தொழிலாளர்கள்

அநீதிக்கு எதிராய் டின்சின் தோட்டத் தொழிலாளர்கள்

தாம் பறிக்கும் 05 கிலோ பச்சை தேயிலைக்கு கமிஷனாக ஒரு கிலோகிராம் தேயிலையை தோட்ட முகாமை பிடிப்பு செய்து தமக்கு அநீதி இழைப்பதாக சுட்டிக்காட்டி பொகவந்தலாவ டின்சின் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (02) கனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதிக்கு அருகில் டின்சின் தோட்ட நுளைவாயிலில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தாம் பறிக்கும் பச்சை தேயிலையை அளவீடு செய்வதற்கு மின்னணு அளவீடுகள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் தாம் தினம் பறிக்கும் பச்சை தேயிலையில் இருந்து பெரும் பகுதியை தோட்ட முகாமை முறையற்ற விதத்தில் பிடிப்பு செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

ஒரு தொழிலாளி 18 கிலோ பச்சை தேயிலை பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் நிர்பந்தித்ததால் தாம் மிகவும் சிரமப்பட்டு இந்த அளவை பறிக்கும் நிலையில் 17 கிலோ பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு அரை நாள் ஊதியம் வழங்கப்படுவதாக இவர்கள் கவலை தெரிவித்தனர்.

தாம் 20 கிலோ பச்சை கொழுந்து பறிக்கும் சந்தர்ப்பத்தில் 5 கிலோ பச்சை தேயிலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து நியாயமற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ள தோட்ட முகாமையாளர் மாற்றப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர். சுமார் மணி நேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image