பெருந்தோட்ட மருத்துவமனைகளை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளை அரசு பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீரமானம் வருமாறு,
தோட்டத்துறையில் காணப்படும் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைத்தல்
மலையக சமூகத்தவர்களுக்கு மிகவும் பயன்வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் தோட்டத்துறையில் காணப்படும் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தல் மிகவும் பொருத்தமானதாக அமையும் என அடையாளங் காணப்பட்டுள்ளது. அது தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாக பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில், குறித்த ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய, தோட்டத்துறையில் காணப்படும் 450 சுகாதார நிறுவனங்களில் முதற் கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.