ஒமிக்ரோன் அலை ஏற்படும் அபாயம்!

ஒமிக்ரோன் அலை ஏற்படும் அபாயம்!

கடந்த ஒரு வார காலத்திற்குள் வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுடைய எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக அச்சேவைக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இதனூடாக ஒமிக்ரோன் பிறழ்வுடன் மற்றொரு கொவிட் அலை ஏற்பட்டுள்ளமை தௌிவாகியுள்ளது என்றும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் சடுதியான அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த வாரம் மாத்திரம் வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 3347 ஆகும். இவ்வெண்ணிக்கையானது டெல்டா பிறழ்வு பரவிய காலப்பகுதிலான நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமமானதாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image