ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை
தேசிய பாடசாலைகளில் பயிற்சிப்பெற்ற பயிலுநர் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
 
இது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க நேற்று (09) கருத்து தெரிவிக்கையில்,
 
தேசிய பாடசாலைகளில் பயிற்சிப் பெற்ற பயிலுநர் பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சினால் நேற்றைய தினம் (08) அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.
 
அதிலே சுமார் 370  தேசிய பாடசாலைகள் பெயரிடப்பட்டுள்ளன. எனினும் உத்தேச தேசிய பாடசாலைகளிலிருந்த பயிலுநர் பட்டதாரிகள் அந்தப் பிரிவுக்குள் உள்ளீர்க்கப்படாதமை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. நேற்று மாலை தான் இந்த அறிவித்தல் வெளியானது. இது தொடர்பில் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோக பண்டாரவுடன நாம் தொலைபேசி மூலம் கலந்துரையாடினோம். இதிலே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
நிச்சயமாக உத்தேச தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தில் இருந்த பயிலுநர் பட்டதாரிகள் தொடர்பில் பிரத்தியேகமாக கவனம் செலுத்தி அவர்கள் தொடர்பான தீர்மானம் ஒன்றை வழங்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயத்தில் நாளை அல்லது நாளை மறுதினம் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image