பயிலுநர் பட்டதாரிகளை நிரந்தர சேவையில் இணைக்கும் வகையில் உபகுழு அறிக்கை

பயிலுநர் பட்டதாரிகளை நிரந்தர சேவையில் இணைக்கும் வகையில் உபகுழு அறிக்கை

பயிலுநர் பட்டதாரிகளை விரைவில் நிரந்தர நியமனத்தில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அமைச்சர், பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று 52,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் அவர்கள் அனைவரையும் நிரந்தர சேவையில் இணைப்பதற்கான அமைச்சரவை உபகுழு அறிக்கையை கொண்டு வர நாம் நடவடிக்கை எடுப்போம். அதற்கான வழிகாட்டல்களை ஜனாதிபதி எமக்கு வழங்கியுள்ளார். எமது நாட்டில் அரச சேவை புதிய தலைமுறையினரை உள்வாங்கி பலப்படுத்தும் போது பொருளாதார ரீதியாக பல துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image