காப்புறுதி முகவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் சட்டங்ககள்

காப்புறுதி முகவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் சட்டங்ககள்

காப்புறுதி முகவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் சட்டங்களை கொண்டு வர தயார் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காப்புறுதி முகவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை வழங்குவது தொடர்பில் தொழில் அமைச்சின் தீர்மானம் குறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலே தொழில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆயுள் காப்புறுதி முகவர்களுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான இயலுமை இல்லை. அவர்களை ஊழியர்களாக உள்வாங்குவதற்கு சட்டப் பிரச்சினைகள் உள்ளன. அவ்விடயத்தில் நேரடியாக தலையிடுவதற்கான இயலுமை தொழில் அமைச்சுக்கு இல்லை. தமது பிரச்சினைகள் தொடர்பில் காப்புறுதி முகவர்கள் பல தடவைகள் தொழில் அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயுள் காப்புறுதி நிறுவனங்களுடன் உருவாக்கப்பட்ட சங்கத்தை இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட பல தடவைகள் அழைத்த போதிலும் அவர்கள் வருகைத் தரவில்லை. அதனால் உறுதியான தீர்மானத்திற்கு வர முடியாமல் போயுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட இன்று (24) காப்புறுதி நிறுவன உரிமையாளர்களை அழைத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image