சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று (24) அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
15 தொழிற்சங்கங்கள் இணைந்து இவ்வடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 7.00 மணிக்கு இவ்வடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.