தொழில் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்!

தொழில் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்!

தமக்கான தொழிலை தோட்ட நிர்வாகம் பெற்று தந்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி ஹட்டன் வெலிஓயா தோட்ட தொழிலாளர்கள் ஐவர் நேற்று (22) காலை முதல் சத்தியாகிரக போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

 தனிமைப்படுத்தல் காலத்தில் தமது வாழ்வாதார தொழில் பாதிக்கப்பட்டதனால் தமக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று ஹட்டன் வெலிஒயா தோட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி போராட்டம் ஒன்றை நடாத்தினர். இந்த போராட்ட சந்தர்ப்பத்தில் தோட்ட தொழிற்சாலைக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது என்ற தோட்ட நிர்வாகத்தின் முறைப்பாட்டினை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 13 பேரை வட்டவளை பொலிசார் ஜூன் 18ம் திகதி கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர் இவர்களில் பெண் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் ஏனைய 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்களில் 24.06.2021 அன்று மூவர் வீடு திரும்பிய நிலையில் ஏனைய ஒன்பது பேரும் 10.07.2021 அன்று வீடு திரும்பினர்.

இந்த 13 பேரில் தோட்ட தொழிலாளர்களான ஒன்பது பேரில் 04 பேருக்கு தோட்டத்தில் தொழில் வழங்கப்பட்டதுடன் ஏனைய 05 பேருக்கு இதுவரை தொழில் வழங்கப்படாததால் தமக்கு தொழில் வேண்டும் என்று கோரியே நேற்று காலை முதல் வெலிஓயா தோட்ட மேற்பிரிவு மாடசாமி கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கடந்த நான்கு மாதங்களாக தமக்கான தொழில் வழங்கப்படாததால் தமது குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதுடன் மன ரீதியாகவும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமக்கான தொழில் மீள கிடைக்கும் வரை இந்த சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image