பொது மக்களின் கவனயீனத்தால் மீண்டும் தொற்று பரவும் அபாயம்...

பொது மக்களின் கவனயீனத்தால் மீண்டும் தொற்று பரவும் அபாயம்...

பொது மக்களின் கவனயீனத்தினால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார்.

இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவிலாளர் சநதிப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்துத் தடை விதித்துள்ள நிலையில் பலர் சுற்றுலா செல்கின்றனர். அவர்களில் சிலர் முகக்கவசம் கூட அணியாதுள்ளனர். நாம் அனைவரும் ஓய்வை அனுபவிக்க வேண்டும். எனினும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை. எனவே இந்த ஓய்வை வீட்டில் இருந்து அனுபவியுங்கள். எனினும் பலர் சுற்றுலா சென்று விடுமுறையை கழிக்கின்றனர். முகக்கவசம் அணிய தவறியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து நடந்துகொண்டால் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். நாளொன்றுக்கு இன்னும் 400 - 500 நோயாளர்கள் அடையாளங் காணப்படுகின்றனர்.

நாம் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் கவனயீனமாக நடந்துகொள்கிறோம். நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்குமானால் மறுபடியும் தேவையில்லாமல் தடைகளை விதிக்க நேரிடும். அந்நிலைக்கு எம்மை கொண்டு வர வேண்டாம். ஆகக்குறைந்தது முகக்கவசமாவது அணியுங்கள். சுகாதார பழக்க வழக்கங்களை குறைந்தது டிசம்பர் வரையிலாவது பின்பற்றுங்கள்.

தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டாலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image