ஒரு பகுதி பயிலுநர் களுக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க முயற்சிக்கிறதா அரசு?

ஒரு பகுதி பயிலுநர் களுக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க முயற்சிக்கிறதா அரசு?

பயிலுநர்களான இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க தவறினால் கடுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பயிலுநர் பட்டதாரிகள் ஒன்றியத்தின் அமைப்பாளர் மகேஸ் விமுக்தி தெரிவித்துள்ளார்.

அநீதியான நிபந்தனைகளை விதித்து 53000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்காது அரசாங்கம் பிற்போடுமாக இருந்தால் நாம் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு செல்லவேண்டியேற்படும். ஆசிரியர் சேவையில் சுமார் 60,000 வெற்றிடங்கள் உள்ளன. அபிவிருத்தி சேவையில் அதிக எண்ணிக்கையான வெற்றிடங்கள் உள்ளன. இருந்தும் பட்டதாரிகளை சேவையில் இணைக்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்ன?

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்ட போதிலும் அந்தக் குழுவும் தீர்வை பிற்போடும் பணியையே செய்து வருகிறது. இப்பயிலுநர் பட்டதாரிகளை மூன்று குழுக்களாக பிரித்து ஒரு குழுவுக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அவ்வாறான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாக இருந்தால் அதற்கு தமது கடுமையான கண்டத்தை வௌியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்,

பட்டதாரிகளின் உரிமைகளை பறிக்கவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருவதுடன் தொடர்ந்தும் அவ்வாறு நடக்குமாக இருந்தால் பிரதேச மட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் மகேஷ் விமுக்தி மேலும் சுட்டிக்காட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image