பிரச்சினயை தீர்ப்பதற்கு பதிலாக அச்சுருத்துகின்றனர்

பிரச்சினயை தீர்ப்பதற்கு பதிலாக அச்சுருத்துகின்றனர்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு பதிலாக சில அமைச்சர்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு அச்சுருத்துகின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்க்கவேண்டியது மிக அவசியம் என்று பல அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவ்வாறான நிலையில் சிலர் மாத்திரம் தொழிற்சங்க செயற்பாட்டை விமர்சிப்பதுடன் அச்சுருத்தும் செயலிலும் இறங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அச்சுருத்தல்களுக்கு தாம் அச்சமடையப்போவதில்லை என்றும் பாடசாலைகள் திறக்கும் போது அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பார்களா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் என்றும் ஒன்லைன் கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகி இன்றுடன் (15) 95 நாட்கள் நிறைவடைந்துள்ளது என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image