மீண்டும் சூடு பிடிக்கும் ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்!

மீண்டும் சூடு பிடிக்கும் ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்!

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு என்று கூறிய தோட்டக் கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாக கூறி மஸ்கெலியா நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்டு மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ​நேற்று (27) தோட்ட, தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மரே தோட்டத்தை சேர்ந்த போரஸ் பிரிவு, நல்லதண்ணி மேல்பிரிவு, கீழ்பிரிவு, வலதல பிரிவு, கெடஸ் பிரிவு, புதுக்காடு பிரிவு, ராஜ மலை பிரிவு ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ரூபா 1000 சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், முன்னர் நாளொன்றுக்கு 12 கிலோகிராம் தொடக்கம் 16 கிலோகிராம் பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையல் இன்று அது 20 கிலோகிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினர்.

தற்போது தேயிலை கொழுந்து விளைச்சல் இல்லாத நிலையில் தம்மால் 20 கிலோகிராம் பறிப்பது என்பது முடியாதுள்ளதோடு, தாம் தினசரி 7 கிலோகிராம் தொடக்கம் 10 கிலோகிரோம் வரையிலான தேயிலை கொழுந்தையே பறிக்கும் நிலையில் உள்ளோம். இதனால் கிலோகிராமிற்கு ரூபா 50 படி தமக்கு தினக்கூலியாக ரூபா 350 தொடக்கம் ரூபா 500 வரையே கிடைக்கப்பெறுகின்றது முன்னர் இந்த தேயிலை கொழுந்து பறித்தாலும், தமக்கு ரூபா 750 தினக்கூலியாக கிடைத்தது என்று தெரிவித்தனர்.

மேலும் தற்போது தேயிலைக்கு பசளையிடப்படுவதில்லை, களை அகற்றப்படுவதில்லை இதனால் தமக்கு கொழுந்து கொய்ய முடியாது உள்ளதாகவும் அட்டைகள் தமது இரத்தத்தை உரிச்சுவதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன. சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெரும் அச்சதுடனேயே பணி செய்ய வேண்டியுள்ளது. மேலும், பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது. என்றும் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மரே தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட முகாமையாளர் வினவியபோது, இந்த பிரச்சினை தற்போது காணப்படுவதை அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினை தமது தோட்டத்திற்கு மட்டுமன்று முழு பெருந்தோட்டத்துறைக்கும் உரியதாக காணப்படுகின்றது. தற்போதைய அதி கூடிய மழை விளைச்சலை இல்லாது செய்துள்ளதோடு, அரசின் கொள்கைக்கமைய இரசாயன உர பாவனையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தமக்கு தேயிலைக்கு இரசாயண உரத்தை பயன்படுத்த முடியாத நிலையின் காரணமாகவும் விளைச்சலில் வீழச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நிவர்த்திப்பதற்காக தமது கம்பனியின் உயர்மட்டம் சில வேலைத்திட்டங்களை தற்பொது முன்னெடுத்துள்ளதோடு, அதற்கான பலன்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்போம். என்று முகாமையாளர் தெரிவித்தார்.

Manager of Moray Esatate

P3

P1

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image