இன்று இரவு 10.00 மணி தொடக்கம் 30ம் திகதி அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் அத்தியவசிய சேவகள், ஆடைத் தொழிற்சாலை மற்றும் விவசாயத்துறைசார் பணிகள் முன்னெடுக்க அனுமதியுள்ளது என்றும் மருந்து விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி உண்டு என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் தடுப்பு விசேட குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. . இலங்கை இராணுவமம், சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்ந்தும் இக்காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.