அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு - உபகுழு அறிக்கை நிதியமைச்சுக்கு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு - உபகுழு அறிக்கை நிதியமைச்சுக்கு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை இன்று (20) நிதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது..

அதிபர் ஆசிரியர் சங்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பல சாதகமான விடயங்கள் குறித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உபகுழு அங்கத்தவர்களில் ஒருவரான அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் நிதியமைச்சில் விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன் அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image