புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில்,  பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான புதிய வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியல் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

 
இதன்படி, சுகாதாரத் தரப்பினர், பாதுகாப்பு தரப்பினர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சுகாதார சேவையாளர்கள் தங்களது பணிக்கு செல்வதற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கிகளில் வரையறுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் இடம்பெறுவருவதுடன், இணையவழி வங்கிக் சேவைக்கு வாடிக்காகையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
 
மின்சாரம், நீர், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்க முடியும்.
 
சகல வழிபாட்டுத்தலங்கள், கூட்டங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், வாராந்த சந்தைகள், மேலதிக வகுப்புகள் என்பவற்றை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வீட்டிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதி.
 
பேக்கரி உற்பத்திகள், கடலுணவு விநியோகம் என்பனவற்றை நடமாடும் சேவைகள் மூலமாக முன்னெடுக்க முடியும்.
 
கொவிட் அல்லாத மரணங்களின் இறுதிக் கிரியைகள், 24 மணிநேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image