அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளது.
டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, மற்றும் பிரசன்ன அமரதுங்க ஆகியோரை அங்கத்தவர்களாக கொண்ட அமைச்சரவை உப குழுஇன்று (12) கூடிய அமைச்சரவை உபகுழுவில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இவ்வமைச்சரவை உபகுழு 'சௌபாக்கியத்தின் நோக்கு' கொள்கைகள் குறிப்பிட்டுள்ள அதிபர் ஆசிரியர்களை அரசதுறையில் கௌரவம் மிக்கவர்களாக்குவதை நோக்காக கொண்டு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இதுவரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இதுவரை மேற்கொண்டுள்ள விடயங்கள் தொடர்பான தகவல்கள் கல்வியமைச்சிடம் இக்குழு பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.