கொவிட் பரிசோதனை கட்டணம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு

கொவிட் பரிசோதனை கட்டணம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு

கொவிட் 19 தொற்றை கண்டறிய பிசிஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகளை தனியார் பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ள அதிகப்பட்ச விலை அறிவித்துள்ள நிலையில் அதிக விலை அறவிட்டால் முறைபாடு செய்ய தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விசேட வர்த்மானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பிசிஆர் பரிசோதனைக்கான விலை ரூபா 6500.00 மற்றும் அண்டிஜன் பரிசோதனைக்கான விலை ரூபா. 2000.00 ஆகும்.

பரிசோதனை அறவீடுகளில் மோசடி இடம்பெற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடலாம் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image