எதிர்வரும் தினங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் தினங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்!

டெல்டா திரிபுடைய 35 பேர் வரை அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்த போதிலும் இதுவரை 250 ​பேர் வரை அடையாளங்காணப்பட்டிருக்கலாம் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் கொவிட் - டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒரு சூழலில் பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினர் நாட்டில் நடமாட்டத்தடையை தளர்த்தியுள்ளமையும் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கின்றமையும் வருத்தத்துக்குரிய விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் சிறுவர்களும் தொற்றுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள உபுல் ரோஹன, தொற்றின் அபாயம் குறித்து அரசாங்கமும் பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக அதிகாரிகள் போலித் தகவல்களை வௌியிடுகின்றனர் என்றும் அதிகரித்துள்ள தொற்று மரண எண்ணிக்கையினை பார்த்து எந்தளவு அபாயம் உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image