கொவிட் தடுப்புப் பணிகளில் இருந்து கிராமசேவகர்கள் விலகல்

கொவிட் தடுப்புப் பணிகளில் இருந்து கிராமசேவகர்கள் விலகல்

​கொவிட் தடுப்பூசி மற்றும் கொவிட் அபாயக் கொடுப்பனவு வழங்கப்படாமை உட்பட கோரிக்கைகளை முன்வைத்து கொவிட் தடுப்புப் பணிகளில் இருந்தும் கிராமசேவகர்கள் விலகிக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் 12,000 கிராமசேவகர்கள் கடமையாற்றியபோதிலும் இதுவரை 1500 பேருக்கு மாத்திரமே இதுவரை கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டப்ளியு. ஜீ. கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.

அரச தலையீட்டில் கிராம சேவகர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தத்தமது பிரசேதங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் போதே மேற்கூறப்பட்ட 1500 கிராமசேவகர்கள் தடுப்பூசிகளை பெற்

அத்துடன் கொவிட் தடுப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு அரச அதிகாரிகளுக்கு கொவிட் அபாய கொடுப்பனவு வழங்குமாறு பல தடவைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிக்கு கடிதம் அனுப்பியபோதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தடுப்பூசி வழங்குவதற்கான ஆவணங்களை தயாரித்து வழங்குவது தவிர அனைத்து கொவிட் தடுப்பு தொடர்பான செயற்பாடுகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளனர் என்றும் கித்சிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் கடந்த 5ம்திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்குவதற்கான ஆவணங்களை தவிரந்த அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image