டயகம சிறுமிக்கு நீதி வேண்டும் - ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் கோரிக்கை

டயகம சிறுமிக்கு நீதி வேண்டும் - ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் கோரிக்கை

மலையகத்தின் டயகம பகுதி சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்  என்று ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்தார்.

அட்டனில் அமைந்துள்ள ப்ரொடெக்ட் .அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், 'பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய டயகம பகுதி சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பல தகவல்கள் வெளியாகினாலும், சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரியவரவில்லை. தரகர் ஒருவர் ஊடாகவே அச்சிறுமி அங்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். சிறுவர்களை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்? என அவர் கேள்வி எழுப்பியதுடன் இதற்கு முன்னரும் இப்படியான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன..

வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் சங்கம் என்றவகையில், இச் சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரியவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.  எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடிமறைக்கப்படக்கூடாது. அந்த சிறுமிக்காகவும் ஏனைய வீட்டுப்பணி பெண்களுக்காகவும் குரல் கொடுக்கும் எமது சங்கம் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுக்கும் வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மலையக பகுதியில் இந்த வீட்டு வேலைக்கு செல்வது தொடர்பாக நாம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம். இதற்காக இலங்கை அரசு சி189 சாசனத்தை இலங்கையில் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

'பெண்கள் இன்று சிந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. பெண்களை வேலைக்க செல்லவேண்டாம் எனக்கூறவில்லை.' ஆனால் 'பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.' என்றம் கருப்பையா மைதிலி வேண்டுகோள் விடுத்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image