எரிபொருள் சார் செயற்பாடுகளை மேற்கொள்ள தனியார்துறைக்கு அனுமதி- தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

எரிபொருள் சார் செயற்பாடுகளை மேற்கொள்ள தனியார்துறைக்கு அனுமதி- தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

எரிபொருளை இறக்குமதி செய்ய, சுத்திகரிக்க மற்றும் விநியோகிக்க தனியார் துறைக்கு அனுமதி வழங்கும் வாபஸ் பெறுமாறு அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து இலங்கை பெற்றோலிய (சிபிசி) தொழிற்சங்கங்கள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

வர்த்தக மற்றும் கைத்தொழிற்றுறை அரச சார்பு முற்போக்கு தொழிலாளர் சங்கம் ஐதேகவின் தேசிய சேவையாளர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணியின் பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர்கள் சங்கம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சங்கம் உட்பட 8 தொழிற்சங்கங்கள் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, சுத்திகரிப்பு, சந்தைப்படுத்தல், வழங்கல், உற்பத்தி, கலவை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு பொருத்தமான எந்தவொரு தரப்பினருக்கும் உரிமங்களை வழங்க அமைச்சருக்கு அதிகாரம் அளிக்க சிபிசி சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்த எந்த திட்டமும் இல்லையெனவும் நாளொன்றுக்கு 100,000 கொள்கலன்களைக் கையாளக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதற்கான சர்வதேச கேள்வி மனுக்களை அழைக்கத் தயாராக உள்ளதாக ஊடகவியலாளர் மாநாடொன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

1961 ஆம் ஆண்டின் சிபிசி சட்டம் 28 இற்கமைய, சுத்திகரிப்பு அதிகாரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இருந்த நிலையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க குறித்த சட்டத்தில் மாற்றம் தேவையென்று தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் தெரிவித்திருந்தார். தொழிற்சங்கங்கள் இதற்கு ஆட்சேபனை வௌியிட்டதையடுத்து அரசாங்கத்தின் முன்மொழிவைப் குறித்த விவாதிக்கவும் முன்மொழிவுகளை வழங்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

the sunday times

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image