நடமாட்டத்தடையை 14ம் திகதி தளர்த்துவது பொறுத்தமானதல்ல- PHI

நடமாட்டத்தடையை 14ம் திகதி தளர்த்துவது பொறுத்தமானதல்ல- PHI

நாட்டில் நாளாந்த கொவிட் 19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நடமாட்டத்தடையை 14ம் திகதி தளர்த்துவது பொருத்தமற்றது என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நடமாட்டத்தடையை விதித்துள்ள போதிலும் நாளாந்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடமாட்டத்தடையினூடாக 90 வீதமான மக்களை பாதுகாக்க முடியும் என நாம் நம்பினோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. அனைத்து நகரங்களிலும் மற்றும் கொழும்பிலும் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்தியவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊழியர்களும் அழைக்கப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்பவர்கள் மாத்திரமே வீடுகளில் உள்ளனர். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமைப்போன்று இயங்குகின்றன.தனியார் போக்குவரத்துக்குப் பதிலாக தமது சொந்த வாகனங்கள் மக்கள் பயன்படுத்துவது மாத்திரமே ஒரேயொரு வித்தியாசமாகும்.

தற்போது நாட்டில் கொவிட் 19 மூன்றாம் அலையின் முதல் தொடர்பு தொற்றாளர்களே தற்போது அடையாளங்காணப்படுகின்றனர். பிசிஆர் பரிசோதனை வசதிகளின் குறைப்பாட்டால் இரண்டாம், மூன்றாம் தொடர்பு நபர்களை அடையாளங்காண்பதில் தாமங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தான் நடமாட்டத்தடை காலப்பகுதியில் பயணிக்கின்றனர். அதனால் தான் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

டெய்லி மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image