அத்தியவசிய சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சுகாதார பாதுகாப்பு

அத்தியவசிய சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சுகாதார பாதுகாப்பு

இம்மாதம் 7ம் திகதிக்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் தொழுற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

அத்தியவசிய சேவைக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி வழங்கல், கிருமி நாசினி திரவம் பெற்றுகொடுத்தல், முக்கவசம் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் பெற்றுகொடுத்தல், போக்குவரத்து வசதிகள் வழங்கல் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட் அபாய கொடுப்பனவு பெற்றுகொடுத்தல் போன்ற முன்வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம் சுட்டிக்காட்டியள்ளது.

முறையான செயற்றிட்டமொன்று இல்லாத காரணத்தினால் பல அரச ஊழியர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஒரு பயிலுநர் பட்டதாரியும் அதில் உள்ளடங்குகின்றனர் என்று மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த 27ம் திகதி அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் அலரி மாளிகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் கொவிட் தடுப்பூசி, சுகாதார பாதுபாப்பு உபகரணங்கள் என்பன வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், அவை வெறுமனே ஊடகங்களுக்கு காட்டும் முயற்சி மாத்திரமே. அதன் பின்னரும் இதுவரை குறைந்தது முக்கவசமாவது அரச ஊழியர்களுக்கு வழங்குவற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image