இலங்கையை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்க்கவுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அலுவலகத்தினால் இந்த அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் இலங்கை பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலுக்குச் செல்லும்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கோஸ்டரிகா, எகிப்து, சூடான், றினிடாட், டொபாகோ ஆகிய நாடுகள் எதிர்வரும் 8ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ளன.
பிரித்தானிய விதிகளுக்கு அமைய சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பிரித்தானிய பிரஜைகள் பயணங்களை மேற்கொள்ள முடியாது.
மேலும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு பிரவேசிக்கின்றவர்கள், பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்.
இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு பிரவேசிக்கின்றவர்கள் தடுப்பூசியை ஏற்றி இருந்தாலும்கூட, அங்கு அங்கீகரிக்கப்பட்ட விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதுடன், இரண்டு கொவிட்19 சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் இருக்கும் இடத்தை கண்டறியக்கூடிய வகையிலான படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு முன்னதாகவே கொவிட் 19 சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.